VadaChennai

வடசென்னை படத்தில் மீனவர்களை புண்படுத்திய காட்சியை நீக்குவதாக வீடியோ மூலம் மன்னிப்பு கேட்டு விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பில் உருவாகிய இருந்த வடசென்னை படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகள் மீன மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்து இருந்தன.

இதனால் தற்போது இந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்குவதாகவும் யாரையும் புண்படுத்துவதாக இந்த காட்சியை வைக்கவில்லை எனவும் வெற்றிமாறன் விளக்கமளித்துள்ளார்.

மேலும் கடந்த வாரத்தில் வடசென்னை படம் உலகம் முழுவதும் ரூ 47 கோடி வசூல் செய்திருப்பதாகவும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.