VadaChennai

நேற்று உலகம் முழுவதும் வெளியாகி இருந்த வடசென்னை படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் என்னவென்று தெரிய வந்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷ் கூட்டணி அமைத்து வெளியாகி இருந்த படம் வடசென்னை.

வடசென்னை மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக காட்டி இருந்ததால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எக்கசக்க வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் வசூல் நிலவரம் குறித்த தகவலும் நமக்கு கிடைத்துள்ளது. முதல் நாளான நேற்று ஒரு நாள் மட்டும் வடசென்னை படம் தமிழகத்தில் ரூ 7 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுவரை வெளியான தனுஷ் படங்களிலேயே மிக பெரிய ஓப்பனிங் படம் என்றால் அது வடசென்னை படம் தான் எனவும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.