Vada Curry Recipe
Vada Curry Recipe

Vada Curry Recipe :

தேவையான பொருட்கள் :

1. தேங்காய் பால் – 1 கப்

2. சோம்பு – 1 ஸ்பூன்

3. நட்சத்திர சோம்பு – 1

4. பட்டை – 1

5. பூண்டு – 12 பல்

6. மிளகு தூள் – 3 ஸ்பூன்

7. பச்சை மிளகாய் – 4

8. இஞ்சி – சிறிய துண்டு

9. கடலை பருப்பு – 1 கப்

10. காய்ந்த மிளகாய் – 3

11. மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

12. வெங்காயம் – 2

13. தக்காளி – 2

14. மல்லி இலை, கருவேப்பிலை – சிறிது

15. உப்பு, எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

தேங்காய் பால், சோம்பு, நட்சத்திர சோம்பு, பூண்டு 12 பல், இஞ்சி, பிரியாணி இலை 1, பட்டை, பச்சை மிளகாய், மிளகு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

1 கப் கடலை பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்து அரைத்து எடுத்து அதில் சோம்பு, பூண்டு நசுக்கியது, உப்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், வெங்காயம், மல்லி இலை போட்டு பிழந்து பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பிசைந்து வடையை தட்டி எண்ணெயில் பொரித்து சிறிதாக மசித்து கொள்ள வேண்டும்.

பிறகு, ஒரு வாணலில் எண்ணெய் விட்டு அதில் கறிவேப்பிலை வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி பின் அதில் தக்காளி போட்டு அதில் அரைத்த மசாலா மற்றும் தண்ணீர் விட்டு கலந்து பின் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விட்டு பின் தேங்காய் பால் சேர்த்து பிறகு வெக வைத்த பட்டாணி போட்டு 10 நிமிடம் கொதிக்க விட்டு பின் சின்ன சின்னதாக மசித்த வடையை இதில் சேர்த்து ஒரு கலக்கு கலக்கி மல்லி இலை தூவி இறக்கினால் சுவையான வடகறி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here