Vada Chennai Movie

Vada Chennai Movie: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியான திரைப்படம் வடசென்னை.

திரையரங்குகளில் வெற்றிகரமாக 10 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தில் அமீர், ஆண்ட்ரியா நடிப்பில் இடம் பெற்றிருந்த முதலிரவு காட்சி நீக்கப்பட்டுள்ளது.

மீனவ சமுதாய சகோதர சகோதரிகளின் மனம் புண்படும்படி இருந்ததாகவும் அக்காட்சியை படத்தில் இருந்து நீக்கும் படியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தற்போது படக்குழு அந்த காட்சியை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அமீர், ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு இரு காட்சிகளை இணைத்துள்ளனர்.

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் வசனங்கள் சிலவும் நீக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வடசென்னை படத்திற்கு பிறகு தனுஷ் மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியாகி இருந்த ராட்சசன் படத்தை இயக்கி இருந்த ராம் குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.