Vada Chennai Movie Secrets
Vada Chennai Movie Secrets

தமிழ் சினிமா கொண்டாடிய வடசென்னை படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் தனுஷ் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

Vada Chennai Movie Secrets : வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட ஹிட் கொடுத்த திரைப்படம் வட சென்னை.

ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் அமீர், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்திருந்த இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது தனுஷ் இல்லையாம்.

அஜித்தை வைத்து அடுத்த கொரானா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட தமிழக பொலிஸ் – இதுவும் செம மாஸ் ( வீடியோ இதோ )

வெற்றிமாறன் இந்த கதையை சிம்புவை மனதில் வைத்து தான் உருவாக்கியுள்ளார். அவரிடம் கதையை கூற அது சிம்புவுக்கும் பிடித்துள்ளது.

ஆனால் படத்தின் ஷூட்டிங் தொடங்க முடியாமல் தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டே இருந்துள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் வெற்றிமாறன் சில மாற்றங்களை செய்து தனுஷை வைத்து இப்படத்தை இயக்கினார்.

படம் எதிர்பாராத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது அனைவருக்கும் மகிழ்ச்சி தான்.

இந்த படத்தை சிம்புவை வைத்து இயக்குவதற்காக வெற்றிமாறன் கிட்டத்தட்ட 5 வருடங்கள் காத்திருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.