இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்திருக்கும் அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை கோளகாலமாக நடைபெற்றது. அப்போது அந்நிகழ்ச்சியில் உரையாடிய வெற்றிமாறன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனுஷின் வடசென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட் உறுதி செய்துள்ளார்.

அதில் அவர் விடுதலை திரைப்படத்தின், 1,2 பாகங்களின் பணிகள் நிறைவடைந்த பிறகு சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தை தொடங்குவேன், அதன் பிறகு வட சென்னை 2 படத்திற்கான வேலைகளை துவங்குவேன் என கூறி உறுதி செய்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் இந்த தகவலை வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.