Vada Chennai 2 Movie Plan is Dropped? - Shocking Update | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
தனுஷின் வடசென்னை 2 திரைப்படம் கைவிடப்பட்டு விட்டதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன. கூடவே அது ஏன் கைவிடப்பட்டது என்ற காரணமும் தெரிய வந்துள்ளது.

Vada Chennai 2 : வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் வடசென்னை. இந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகும் என கூறப்பட்டு வந்தது.

இரண்டு கெட்டப்பில் விஜய் ரசித்து ரசித்து நடித்தது இது தான் – வெளிவராத பிகில் சீக்ரெட் இதோ.!

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான முயற்சியை படக்குழு கைவிட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே வடசென்னை படத்தில் வடசென்னை மக்களை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டு இருந்ததாக கருத்து நிலவி வருகிறது.

NGK தோல்வி படமா? தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்.!

இதனால் மீண்டும் அப்பகுதியில் படப்பிடிப்பை நடத்த மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதாலும் மீண்டும் இந்த குழுவை ஒன்றிணைப்பது கடினமான ஒன்று என்பதாலும் படக்குழு இப்படியொரு முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது படக்குழு கூறினால் தான் தெளிவாக தெரிய வரும் .

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.