Vaccine Injection Release Date in India
Vaccine Injection Release Date in India

ஆகஸ்ட் 15 முதல் கொரோனாவில் இருந்தும் இந்திய மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vaccine Injection Release Date in India : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் அதிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் ஆய்வுகள் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேசமயம் வைரஸிலிருந்து வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கையும் பல மடங்காக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் ஐ சி எம் ஆர் அமைப்பும் பாரத் பயோ டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கோவேக்சின் என்ற குரானா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 15 முதல் மக்களுக்கு செலுத்த திட்டமிட்டு வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் சுதந்திர தினத்தன்று வெள்ளைக்காரர்களிடம் இருந்து இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது போல கொரானாவிற்கும் விடுதலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நாளில் ரஜினி படத்திற்கு இணையாக மாஸ் காட்டிய அஜித், ஒரே தியேட்டரில் 100 காட்சி – ஆனால் படம் பிளாப், என்ன படம் தெரியுமா?

மேலும் இந்த தடுப்பு மருந்து சோதனை முயற்சிக்காக சென்னை காட்டாங்குளத்தூர் அமைந்துள்ள SRM மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகின்றன.

மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் சுதந்திர தினத்தில் கோவேக்சின் என்ற தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.