ஒரு வருஷம் முழுக்க காத்திருந்தும் எந்த பிரயோஜனமும் இல்லாததால் சிவகார்த்திகேயன் திரைப்படம் நேரடியாக OTT-ல் வெளியாக உள்ளது.

Dhanush Reaction on Jagame Thanthiram Release : சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தைத் தொடங்கி அதன் பின்னர் தொகுப்பாளர் காமெடி நடிகர் என படிப்படியாக உயர்ந்து இன்று தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.

ஒரு வருஷமா வெயிட் பண்ணி பிரயோஜனம் இல்லை.. OTT-ல் ரிலீசாகும் சிவகார்த்திகேயன் திரைப்படம்.!!

நடிகராக மட்டுமல்ல தயாரிப்பாளராகவும் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் கனா என்ற திரைப்படமும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா எந்தத் திரைப்படமும் வெளியானது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக வாழ் என்ற படத்தைத் தயாரித்துள்ளார். இதனை அருவி பட இயக்குனர் அருண் புருசோத்தமன் இயக்கியுள்ளார்.

2019ஆம் ஆண்டு மொத்த படப்பிடிப்பும் முடிந்து படத்திற்கு யு ஏ சான்றிதழ் கிடைத்திருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்திரைப்படம் ரிலீசாகாமல் போனது. தற்போது மீண்டும் இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இயல்புநிலை எப்போது திரும்பும் என தெரியாத நிலையில் இத்திரைப்படத்தினை நேரடியாக OTT-யில் வெளியிட படக்குழு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.