வாழை படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வரும் இயக்குனர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நவ்வி ஸ்டுடியோஸ் தயாரிப்பிலும் சந்தோஷ நாராயணன் இசையமைப்பிலும் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் நடிகர் கலையரசன் முகிலாவிமல் திவ்யா துரைசாமி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த மாதம் 23ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.
இப்படியான நிலையில் இந்தப் படம் குறித்த முதல் விமர்சனத்தை பி சி ஸ்ரீராம் வெளியிட்டுள்ளார். அதாவது இந்த படம் வாழ்க்கையில் நடக்கும் உண்மையை கூறும் படமாக அமையும் என்றும், பார்ப்பவர்கள் வாயடைத்து போய்விடுவார்கள் என்றும், கண்டிப்பாக இந்த படம் மக்கள் மனதில் இடம் பெறும் எனவும் கூறியுள்ளார்.
இவரின் இந்த முதல் விமர்சனம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது.