Vaazhai Movie Box Office Collection Update
Vaazhai Movie Box Office Collection Update

வாழை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதனைத் தொடர்ந்து கர்ணன், மாமன்னன் போன்ற வெற்றி படங்களை கொடுத்து பிரபலமான இயக்குனர் ஆனார்.

இவரது இயக்கத்தில் நேற்று வெளியான படம் வாழை. இந்தப் படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார்.

இந்தப் படம் வெளியாகி மக்கள் மனதில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மணிரத்னம் ,பாலா, மிஷ்கின் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டி தள்ளி எழுந்தனர்.

தற்போது இந்த படத்தின் ஒரு நாள் வசூல் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 1. 3 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வார இறுதி நாட்கள் என்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.