வாழை படத்தில் டிரெய்லர் அப்டேட் கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் பரியேறும் பெருமாள்,கர்ணன், மாமன்னன் போன்ற படங்கள் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்தது.
அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளியாக உள்ள படம் வாழை, இந்த படத்தில் கலையரசன் கதாநாயகனாகவும், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா போன்ற பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் இந்தப் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என்று மாரி செல்வராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தப் படம் 23ஆம் தேதி வெளியாக போவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பாடல்கள் வெளியான நிலையில் ட்ரைலர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்க செய்துள்ளது.