
பழைய கதையை கையில் எடுத்திருந்தாலும் அதை இந்த கால சமூகத்திற்கு ஏற்றவாறு தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் வாத்தி.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகி உள்ள திரைப்படம் வாத்தி.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

படத்தின் கதைக்களம் :
படம் தொடங்குவதும் மூன்று மாணவர்கள் பழைய விசிடி மூலம் ஒரு வித்தியாசமான நபரை காட்டுகின்றனர். அந்த நபர் தான் வாத்தியார் பாலா ( தனுஷ்).
கல்வி தனியார்மயமாகும் நிலையில் அரசு பள்ளியில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி தாழ்த்தப்பட்ட மாணவர்களின் வாழ்க்கையை கல்வி மூலம் எப்படி வெளிச்சத்தை கொண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதைக்களம்.
படத்தைப் பற்றிய அலசல் :
வழக்கம்போல நடிகர் தனுஷ் அப்படியே அந்த பாலா கதாபாத்திரமாகவே மாறி ஒரு வாத்தியாராகவே வாழ்ந்துள்ளார். படத்தின் மொத்த கதையையும் தன் தோள் மீது சுமக்கிறார்.
அவருக்கு அடுத்தபடியாக சம்யுதா அழகான நடிப்பை கொடுத்துள்ளார். தனுஷ் மற்றும் சம்யுக்தா இடையேயான கெமிஸ்ட்ரி பக்கவாக ஒர்க் ஆகியுள்ளது.
வில்லனாக வரும் சமுத்திரகனி எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார்.
ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளது. பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம்.

வெங்கி அட்லூரி பழைய கதையை கையில் எடுத்திருந்தாலும் அதை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார் பல மாற்றியமைத்து திறம்பட திரைக்கதை அமைத்து சுவாரஸ்யமாக இயக்கியுள்ளார்.