தனுஷின் வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வரும் தனுஷ் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வாத்தி’ திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

பிரம்மாண்டமான செட்டில் நடைபெற இருக்கும் வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.!! - புகைப்படத்துடன் வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.!

வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக இருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க நடிகை சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அண்மையில் இப்படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரம்மாண்டமான செட்டில் நடைபெற இருக்கும் வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.!! - புகைப்படத்துடன் வெளியான லேட்டஸ்ட் அப்டேட்.!

அதன்படி வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கான பிரம்மாண்டமான செட்டும் உருவாகி வரும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.