நடிகர் துல்கர் சல்மான் அடுத்ததாக தனுஷ் பட இயக்குனர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் வெங்கி அட்லூரி. இவரது இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியான வாத்தி திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருந்தது.

இப்படத்தின் வெற்றியால் தற்போது தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் இயக்குனர் வெங்கி அட்லூரியின் அடுத்த படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி அப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது. மேலும் இப்படத்தை 2024 ஆம் ஆண்டு சம்மரில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் பெயர் இடம் படாமல் இருக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.