வாத்தி திரைப்படத்தின் கலெக்ஷன் அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவரது நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியிருந்த ‘வாத்தி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக கடந்த மாதம் வெளியானது.

கல்வியின் முக்கியத்துவத்தை கொண்டு உருவாகி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இப்படம் நேற்றைய தினம் netflix ott தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் கலெக்ஷன் அப்டேட்டை படக்குழு அதிகாரவூர்வமாக மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளது. அதன்படி வாத்தி திரைப்படம் உலக அளவில் ₹118 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ₹100 கோடி வசூலை கடந்த முதல் தனுஷ் படமாக இப்படம் பதிவாகி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.