தனுஷின் வாத்தி திரைப்படத்தின் சென்சார் அப்டேட் வைரலாகி வருகிறது.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படம் வரும் 17ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக உள்ளது.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் உள்ளிட்டவை இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் நிலையில் இப்படத்தின் சென்சார் அப்டேட் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி வாத்தி திரைப்படத்திற்கு கிளீன் யூ சான்றிதழை சென்சார் நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 19 நிமிடங்கள் எனவும் தெரிய வந்துள்ளது.