வாத்தி கம்மிங் வீடியோ பாடல் புதிய சாதனை படைத்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளது.

Vaathi Coming Video Song Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

வாத்தி கம்மிங் வீடியோ பாடல் படைத்த புதிய சாதனை - தெறிக்கவிட்ட கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

அனிருத் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பியது. இந்த பாடல்கள் யூடியூபில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் தொடர் சாதனைகளை படைத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது வாத்தி கம்மிங் பாடலின் வீடியோ பாடல் யூடியூபில் 167 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி சமூக வலைத்தளங்களில் தெறிக்க விட்டு வருகின்றனர்.