Vaathi Coming Song Records in YouTube
Vaathi Coming Song Records in YouTube

தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்பட பாடல் புதிய சாதனையை படைத்துள்ளது.

Vaathi Coming Song Records in YouTube : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இந்நேரத்திற்கு வெளியாகி வசூலை வாரி குவித்து இருக்க வேண்டும்.

ஆனால் பரவிவரும் கொரோனா வைரஸ், லாக் டவுன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போயுள்ளது.

இது விஜய் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இப்படத்தின் அப்டேட்டை கொடுங்கள் எனக் கேட்டும் படக்குழு அமைதி காத்து வருவது அவர்களை மேலும் வருத்தமடைய செய்துள்ளது.

இப்படி வருத்தத்தில் உள்ள ரசிகர்களுக்கு ஓரளவிற்கு உற்சாகத்தை கொடுப்பதே இந்த படத்தின் பாடல்கள் படைக்கும் சாதனைகள் தான்.

இது தான் பக்கா மாஸ்.. பட்டையை கிளப்பும் மாஸ்டரின் படத்தின் புது போஸ்டர்!

லாக் டவுனுக்கு முன்னரே இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து விட்டது. இதனால் மாஸ்டர் பட பாடல்கள் யூட்யூபில் புதுப்புது சாதனைகளை படைத்து வருகின்றன.

அந்த வகையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் என்ற பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதனை விஜய் ரசிகர்கள் தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.

மாஸ்டர் திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகுமா என எதிர்பார்க்கின்றனர். ஆனால் நிலைம சரியானால் மட்டுமே படம் ரிலீஸ் என்பது உறுதியாகும் என கூறப்படுகிறது.

https://twitter.com/Prabhak15372744/status/1279320436933681153?s=19
https://twitter.com/MMK_offl/status/1279320016429572097?s=19