நடிகர் தனுஷின் வாத்தி படத்தின் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் வாத்தி.

தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் பத்து கோடி வரை வசூல் செய்திருந்த இந்த திரைப்படம் மூன்று நாளில் கிட்டத்தட்ட 43 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் பரவியது.

ஆனால் உண்மையான வசூல் என்ன என்பதை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்காமல் இருந்து வந்த நிலையில் 43 கோடியை விட இந்த படம் அதிகமாகவே வசூல் செய்துள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆமாம் மூன்று நாளில் தனுஷ் படம் உலகம் முழுவதும் 51 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.