வாத்தி திரைப்படத்தின் ஆடியோ லான்ச் தொடங்கும் நேரம் குறித்த அறிவிப்பு வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் தனுஷ். கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வரும் இவர் இதற்கு முன்பு வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழில் ‘வாத்தி’, தெலுங்கில் ‘சார்’ என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கும் படத்தில் நடித்திருக்கிறார்.

பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இதனால் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இந்நிகழ்ச்சியை தொடங்க இருக்கும் நேரம் குறித்த புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதன்படி வாத்தி இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு தொடங்க இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்தப்போஸ்டர் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.