vazhaipoo-poriyal

தேவையான பொருட்கள்:
வாழைப்பூ –1,
எண்ணெய் – சிறிதளவு,
கடுகு – சிறிதளவு,
உளுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 4,
தேங்காய் பூ – சிறிதளவு,
கடலை பருப்பு – 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – சிறிதளவு.

செய்முறை:
1) முதலில் வாழைப்பூவில் இருக்கும் நடுநரம்பை நீக்கிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
2) பின்னர் அந்த நறுக்கிய வாழைப்பூவை அரிசி கழுவிய தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.
3) வாழைப்பூவுடன், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு வேக வைக்க வேண்டும்.
4) வெந்த பிறகு நீரை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
5) பின்னர் அதில் வேக வைத்த வாழைப்பூவை போட்டு கிளறி தேங்காய் துருவலை போட்டு கிளறி இறக்கினால், சுவையான வாழைப்பூ பொரியல் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here