நீதி, சாதி பாகுபாடுகள், உள்ளூர் அரசியல் ஆகியவற்றை மையமாக கொண்டு வெளிவந்த வாய்தா படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சலவை செய்யும் கூலி வேலை செய்து வருகிறார் அப்புசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாடகத்துறை பேராசிரியர் மு ராமசாமி. ஒரு நாள் எதிரெதிரே வந்த இரு சக்கர வாகனங்களின் பெருமையின்மையால் ஏற்படும் விபத்தில் சிக்கி கொள்கிறார்.

வென்றதா நீதி?? வாய்தா திரைப்பட விமர்சனம்.!!

அதன்பின்னர் கிராமத்தில் பஞ்சாயத்து நடந்து பாதிக்கப்பட்ட அப்புசாமிக்கு நஷ்ட ஈடு கொடுக்க ஒப்புக்கொண்டு பின்னர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகின்றனர். சாதிய பாகுபாடுகள், உள்ளூர் அரசியல் போன்றவைகளால் அப்புசாமிக்கு நீதி கிடைக்காமல் இருக்கிறது.

அதன்பின்னர் வழக்கறிஞர் ஒருவர் இந்த கேஸை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்கிறார். அதன்பின்னர் அங்கும் இந்த வழக்கு வாய்தா மேல் வாய்தாவாக சென்று கொண்டிருக்கிறது. கடைசியில் என்ன நீதி கிடைத்தது என்பது தான் படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் : சாதிய பாகுபாடுகளை இயக்குனர் மகிவர்மன் வெளிப்படையாக பேசி உள்ளார்.

வென்றதா நீதி?? வாய்தா திரைப்பட விமர்சனம்.!!

அப்புசாமி மகனின் காதல் ட்ராக் தேவையில்லாத ஒன்றாக உள்ளது. நாசர் மையக்கதை நகர்வுக்கு முக்கியமான ஒருவராக உள்ளார். படத்தில் எடிட்டிங் வேலைகள் நடந்ததா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

மொத்தத்தில் வாய்தா சாதி ரீதியான அடக்குமுறைகளை தைரியமாக பேசும் படம்.