வாத்தி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகி உள்ளது.
Vaa Vaathi Song From Vaathi Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்கு பிறகு இவரது நடிப்பில் அடுத்ததாக வாத்தி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் அட்லூரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுகு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது.
ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் வா வாத்தி என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
தனுஷ் குரலில் மனதை கவரும் மெலோடியாக இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. இதோ பாருங்க