வி3 படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் vidhya victim verdict. இந்த படம் சுருக்கமாக v3 என அழைக்கப்படுகிறது.

எங்க தான் போகுது நம்ம தேசம்?? இணையத்தை கலக்கும் வி3 படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்.!!

வரலட்சுமி சரத்குமார் உடன் எஸ்தர் அணில், பாவனா, ஆடுகளம் நரேன் உட்பட பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை அமுதவாணன் இயக்க ஆலன் செபஸ்டியன் இசையமைத்துள்ளார். Team A Ventures நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

ஏற்கனவே பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் ஜனவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்க தான் போகுது நம்ம தேசம்?? இணையத்தை கலக்கும் வி3 படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்.!!

இப்படியான நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து எங்க தான் போகுது நம்ம தேசம் என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Enga Dha Pogudu | Varalaxmi Sarathkumar | Vindhya Victim Verdict V3 Lyrical Video | Amudhavanan |