Uzhundhu kali : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Dinner Ideas, Easy Recipe Uzhundhu kali : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Dinner Ideas, Easy Recipe

Uzhundhu kali :

தேவையான பொருட்கள்:

வெ. உளுத்தம் பருப்பு – 300 கிராம், வெல்லம் – 250 கிராம்,
நெய் – 200 கிராம், சுக்குத்தூள் – 1 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – 1டீஸ்பூன், அதிமதுரப்பொடி – 1 டீஸ்பூன்,
நெல்லிக்காய்ப்பொடி – 1 டீஸ்பூன்,
வெந்தயக்கீரைப்பொடி – 3 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் – 1 டம்ளர். தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன்,
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்,
தோல் நீக்கிய உளுந்து – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் முருங்கைப்பூ பொரிய‌ல்

செய்முறை:

1) உளுத்தம்பருப்பை ஊற வைத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.

2) பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் விட்டு தேங்காப்பாலையும் தட்டிய வெல்லத்தையும் போட்டு கொதிக்கவிடவும்.

3) அது கொதித்ததும் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள், அதிமதுரப்பொடி, நெல்லிக்காய்ப்பொடி, வெந்தயக்கீரைப்பொடி உளுந்துமாவை நன்றாகக் கிளறி கொண்டிருக்கவும். மாவு வெந்து சுருண்டு வரும் பதத்தில் இறக்கவும்.

4) ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு பொரித்து, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், வெந்தயம் போட்டுத்  தாளித்து சேர்த்து கலந்து ஆறியதும் உருண்டை பிடிக்கவும்.

5) சுவையான மூலிகை உளுத்தங்களி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here