Utharavu Maharaja Movie Review
Utharavu Maharaja Movie Review

Utharavu Maharaja Movie Review – உதயா, பிரபு, பிரியங்கா, செரா, நாசர், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குட்டி பத்மினி, ஸ்ரீமன், பிரபல தயாரிப்பாளர் கோ.தனஞ்ஜெயன், மனோஜ்குமார், சோோனியா, ஆடம்ஸ, மதுமிதா உள்ளிட்ட மற்றும் பலர் ஆசிப் குரைஷி இயக்கத்தில், ஜேசன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், க்ரைம் மற்றும் சைக்கிக் த்ரில்லர் படமாக வெளிவந்திருக்கும் படம் தான் “உத்தரவு மகாராஜா.”

இஸ்திரி தொழில் செய்யும் எம்.எஸ.பாஸ்கரின் மகன் உதயா. சிறு வயதில் இஸ்திரிக்கு வந்த ஒரு கோட்டையும், சூட்டைையும்யும் அணிய ஆசைப்பட்டு அவமானப்படுகிறார். அதனால் சற்றே டிஐடி’ என்று பெயருடைய மன நோய் பாதிக்கப்பட்டவராகிறார். மேலும், பெரிய பணக்காரனாக வேண்டும் எனும் லட்சியமும் கொள்கிறார். வளர்ந்து ஆளான பின்னும் அவருக்கு அந்த பாதிப்பு தொடர்கிறது.

அந்த மனநோயால் ‘அவருக்குள் அடிக்கடி ஒரு ராஜா குதிரையில் வந்து உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார். அதற்கேற்றபடி அவர் பைத்தியம் பிடித்தவர் போல நடக்கிறார். ஆனால், உதயாவுக்குள் ஒரு பெரும் ரகசியம் இருக்கிறது என இன்ஸ்பெக்டர் ஸ்ரீமன் நினைக்கிறார். அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் ஸ்ரீ மனுக்கும் ரசிகனுக்கும் அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருக்கிறது. அது என்ன மாதிரி அதிர்ச்சி? என்பதுதான் “உத்தரவு மகாராஜா” படத்தின் மீதிக் கதையும், களமும்.

தமிழ் சினிமாவில் தீராத ஆசையில் சிலர் இருப்பார்கள். என்றாவது ஒரு நாள் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நடித்துக் கொண்டேயிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் உதயா. தன் நடிப்பு ஆசைக்காக வேறு ஒரு தயாரிப்பாளருக்குத் தொந்தரவு தராமல், தானே நடித்து ஒரு இயக்குனருக்கும் வாய்ப்பு கொடுத்திிருக்கிறார். இதற்கு முன் தான் நடித்த படங்களை விட இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென முடிவெடுத்து இந்த ‘உத்தரவு மகாராஜா’ படத்தை எடுத்திருக்கிறார் போலும் உதயா.

படம் முழுவதும் உதயா நடித்துக் கொண்டேயிருக்கிறார். மன நோய் பாதிக்கப்பட்டவர் என்பதால் எப்படி நடித்தாலும் பரவாயில்லை….. என, அவர் கொஞ்சம் ஓவராகவே நடித்திருக்கிறார். கண்களில் கான்டாக்ட் லென்ஸ், தாடி, எப்போதும் கோட் சூட் என தன் தோற்றத்தை ரொம்பவே கதாபாத்திரத்திற்கேற்றபடி மாற்றியிருக்கிறார்.

படத்தின் பிளாஷ் பேக்கில் வரும் ஒரு நாயகி யதார்த்தமாக நடித்திருக்கிறார். அந்த கிராமத்துப் பெண் கதாபாத்திரத்திற்கும் பொருத்தமாக இருக்கிறார். உதயாவின் கரண்ட் காதலியாக படத்தில் நடித்திருப்பவர் நடிக்க முயற்சித்து தோற்று இருக்கிறார்.

நடிகர் பிரபுவின் டாக்டர் கம்’ போட்டோகிராபர் கதாபாத்திரத்தை, இந்தப்படத்தின் வில்லன் என்பதா? அல்லது குணச்சித்திரக் கதாபாத்திரம் என்பதா..? படத்தின் இயக்குனருகே வெளிச்சம்.

பிரபுவுடன் நட்பாக காதலுடன்். பழகும் இன்னொரு இளம் நாயகி மிகவம் கெட்டிக்காரத்த்தனமாக நடித்திருக்கிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் கலகலப்பாக ஈர்க்கிறார்.

ஸ்ரீமன் பொறுப்பான இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார். பெண போலீஸ் கோவை சரளா வழக்கம் போல காமெடி என்ற பெயரில் கத்திகூச்சல் போடுகிறார். நாசர், எம்.எஸ.ம பாாஸ்கர், மனோபாலா, பிரபல தயாரிப்பாளர் கோ.தனஞ்செயன், ஆடம்ஸ, குட்டி பத்மினி இவர்களும் படத்தில் தங்கள் பாத்திரமறிந்து பக்காவாக நடித்திருக்கிறார்கள்.

Utharavu Maharaja Movie Review
Utharavu Maharaja Movie Review

சத்ய நாராயணனின் படத்தொகுப்பில் இன்னும் பல காட்சிகள் வெட்டி எறியப்பட்டிருக்கலாம். கொடைக்கானல் காட்சிகள் உள்ளிட்ட ஒவ்வொரு காட்சியைையும்யும் ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா ரசனையாக படமாக்கியிருக்கிறார்.

நரேன் பாலகுமாரின் பின்னணி இசை கதைக்கேற்ற மிரட்டல். அதே போன்று, படத்தில் தேவையற்ற பாடல்கள் இல்லாதது ரசிகனுக்கு மிகப் பெரும் ஆறுதல்.

அறிமுக இயக்குனர் ஆசிப் குரைஷி இயக்கியிருக்கும் படம். திரைக்கதையில் ரொம்பவே குழப்பம் காணப்படுகிறது. ஒரு வித்தியாசமான கதை, மொத்தப் படத்தையும் இன்னும் தெளிவான திரைக்கதையுடன் கொடுத்திருக்கலாம். ஒரு வேளை, க்ரைமுடன் கூடிய சைக்கிக் த்ரில்லர் ஸ்டோரி என்பதால் இப்படி இயக்குனர் ஆசிப்பும் மற்ற படக்குழுவினரும் படமாக்கியிருக்கிறார்களோ, என்னவோ.?! எப்படியோ, ரசிகனுக்கு பிடித்தால் சரி!

REVIEW OVERVIEW
utharavu-maharaja-movie-review"உத்தரவு மகாராஜா' - ரசிகனுக்கு பெரிய அளவில் பிடித்தால், நடிகர் - தயாரிப்பாளர் உதயா, 'உற்சாக ராஜா!"