சிம்புவுக்கு எதிராக சதி நடப்பதாகவும் அதனை தடுக்க பிரதமர் மோடி அவர்களையும்
சந்திப்பேன் என உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

Usha Rajendhar About Simbu Issue : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து தற்போது ஹீரோவாக 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் சிம்பு. சர்ச்சை நாயகனாக வலம் வந்தாலும் நாளுக்கு நாள் இவருக்கான ரசிகர் கூட்டம் அதிகரித்த வண்ணம் மட்டுமே உள்ளது.

இருக்கும் இடத்தில் இருந்தே வழிபடலாம், ‘கங்கா ஸ்நானம்’ : வழிமுறைகள்..

இவரது நடிப்பில் வெளியாகி பெரும் தோல்வியைத் தழுவிய அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் பிரச்சனை இன்றளவும் முடிந்தபாடில்லை. இதையெல்லாம் தாண்டி சிம்பு நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகளை நடத்த கூடாது என தென்னிந்திய நடிகர்கள் சங்கம் பிரச்சனை செய்து வருவதாக உஷா ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சிம்புவுக்கு எதிராக நடக்கும் சதி.. மோடியை சந்திப்பேன் என ஆவேசப்பட்டார் உஷா ராஜேந்தர்.!!

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திற்காக சிம்பு 13 கோடி ரூபாய் விட்டுக் கொடுத்தார். அதையெல்லாம் பொருட்படுத்தாது தயாரிப்பாளர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குற்றம் சாட்டினார். இதனையடுத்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நாங்கள் சொல்வது தான் செய்ய வேண்டும் என நடிகர்கள் சங்கம் பிரச்சனை செய்து வருகிறது. நீதிமன்றத்தை தாண்டி ஒரு தீர்ப்பை வழங்க இவர்கள் யார்? பத்திரிக்கையாளர்கள் இதுகுறித்து கேட்டால் எங்களுக்கு சிம்புவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் படத்தில் தாராளமாக நடிக்கலாம் என கூறிவிட்டு பின்னர் கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர்.

BIGG BOSS 5-ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் – வெளியான FULL LIST.!

ஸ்டாலின் எங்க பக்கம் இருக்கிறார் உதயநிதி எங்க பக்கம் இருக்கிறார் எங்களால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என கூறுகின்றனர். என் கணவர் ராஜேந்தர் திமுகவுக்காக எவ்வளவு உழைத்துள்ளார் என ஸ்டாலினுக்கு தெரியும். அவர் ஒரு போதும் இதற்கு உடன் போக மாட்டார் என கூறியுள்ளார்.

மேலும் இதே பிரச்சினை தொடர்ந்தால் நான் ஸ்டாலினை சந்திக்க தயார், பிரதமர் மோடியையும் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.