Uses of Thiruneerru Pachilai :
Uses of Thiruneerru Pachilai :

Uses of Thiruneerru Pachilai :

* இருதய நடுக்கத்திற்கு: திருநீற்றுப்பச்சிலையை முகர்ந்து வருதல் இருதயத்திற்கு நல்லது.

* இருமல் தீர:

திருநீற்றுப்பச்சிலை சாற்றை தேனில் கலந்து குடித்துவர இருமல் தீரும்.

* இரத்தம் சுத்தமாக:

இரத்தம் சுத்தமாக திருநீற்றுப்பச்சிலை விதைகளை எடுத்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.

* இரைப்பு இருமல் குறைய: திருநீற்றுபச்சிலை சாற்றில் மிளகு சேர்த்து ஊற வைத்து பொடி செய்து மூக்கில் உறிஞ்ச இருமல் குறையும்.

* கண் எரிச்சல் குறைய: திருநீற்றுப்பச்சிலை சாறு கண்ணின் மேல் தடவ எரிச்சல் குறையும்.

* தூக்கமின்மை குறைய: திருநீற்றுப்பச்சிலையை முகர தூக்கமின்மை குறையும்.

*கண் கட்டி குறைய:

திருநீற்றுப் பச்சிலையை அரைத்து பூசினால் கண்கட்டி குறையும்.

*அரிப்பு குறைய:

திருநீற்றுப்பச்சிலைச் சாற்றுடன் கற்பூரவள்ளி சாறு சேர்த்து தடவிவர அரிப்பு குறையும்.

*தலைவலி குறைய: திருநீற்றுபச்சிலையை எடுத்து முகர்ந்து வந்தால் தலைவலி குறையும்.

*தொண்டை வலி குறைய: திருநீற்றுப்பச்சிலை சாறு பிழிந்து சாறு எடுத்து காலை, மாலை ஒரு ஸ்பூன் அருந்தி வந்தால் தொண்டை வலி மற்றும் கபம் குறையும்.

*வியர்வை நாற்றம் குறைய: திருநீற்றுப்பச்சிலை, துளசி, வேப்பங்கொழுந்து இவை மூன்றையும் நன்கு அரைத்து பாசிப் பயிறு கலந்து தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் குறையும்.

*வாந்தி குறைய:

திருநீற்றுப் பச்சை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து நீரில் கலந்து அருந்தினால் வாந்தி குறையும்.

*வயிற்று வாயு நீங்க: திருநீற்றுப்பச்சிலை சாறு தேன் கலந்து குடித்து வர வயிற்று வாய்வு நீங்கும்.

வாய்ப்புண் குறைய: திருநீற்றுப்பச்சிலையை வாயில் போட்டு மென்று வந்தால் வாயில் ஏற்படும் புண் குறையும்.

விஷம் குறைய:
திருநீற்றுப்பச்சிலை வேர்களை அரைத்து தடவ விஷம் குறையும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here