Uses of Vetrilai :
Uses of Vetrilai :

Uses of Vetrilai :

“வெற்றி” தரும் வெற்றிலையின் மருத்துவ பயன்களை படித்தால், வியந்து போவீர்கள்!!

வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். வெற்றிலை பசியை தூண்டக் கூடியது.

முக்கிய குறிப்பு:

வெற்றிலையின் காம்பையும், நுனியையும் பின்புறத்தில் உள்ள நரம்பையும் நீக்கியே உண்ண வேண்டும். அப்படி நீக்காமல் உண்பதால் வெற்றிலையின் மருத்துவ குணம் கிடைக்காமல் போகும். இப்படி உண்பவர்களிடம் லட்சுமி சேரமாட்டாள் என்று ஒரு பழ மொழியும் உள்ளது.

1) வயிற்றுப் பொருமல் குணமாக வெற்றிலை, ஓமம் இடித்து பிழிந்து தேனை கலந்து பருக வேண்டும்.

2)கசப்பான மருந்து உட்கொண்டவுடன் வெற்றிலை காம்பை வாயில் இட்டு சுவைத்தால் குமட்டல் இருக்காது.

3) தாய்ப்பால் சுரக்க வெற்றிலையை மார்பகத்தில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கும்.

4) இருமல் குறைய வெற்றிலை மென்று சாப்பிட இருமல் குறையும்.

5) தலைவலி குறைய கிராம்பை மைப்போல் அரைத்து அதனை வெற்றிலைச்சாறுடன் குழைத்து பற்றுப்போட தலை வலி குறையும்.

6) திடீர் என தோன்றும் நெஞ்சு வலிக்கு கஸ்தூரியை ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட்டால் வலி குறையும்.

7) நாள்பட்ட விஷக்கடிக்கு வெற்றிலையும், மிளகும் சேர்த்து அரைத்து 2 கிராம் அளவு சாப்பிட்டு வர விஷத்தன்மை மாறும்.

8) நகச்சுற்று குறைய வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து பூச நகச்சுற்று குறையும்.

9) வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை முதலியவற்றை பொடி செய்து தினமும் 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டுவர மூட்டுவலி குறையும்.

10) மிளகை மோர், வெற்றிலைச்சாறில் ஊறவைத்து காயவைத்து பொடி செய்து தேனில் காலை, மாலை சாப்பிட ஆஸ்துமா குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here