Uses of Puthina
Uses of Puthina

 Uses of Puthina :

நீங்கள் தினமும் புதினா பயன்படுத்துபவரா? தெரிந்துகொள்ளுங்கள்!!! புதினாவின்
பயன்களை.

புதினா:
உடலுக்கு ஆரோக்கியமும் மனதிற்கு புத்துணர்ச்சி தரும் ஓர் அற்புத மூலிகை புதினா. புதினா சாறு முதல் துவையல் வரை, பிரியாணி முதல் பச்சடி வரை, நமது உணவு பலவற்றிலும் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக புதினா விளங்குகிறது.

● மருத்துவக் குணங்கள்:

புதினாவில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள், உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், ரிபோபிளேவின், தயாமின் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

(1) தண்ணீரால் ஏற்படும் தொற்று, தொண்டை சார்ந்த நெஞ்சு எரிச்சல் அமிலத்தன்மை ஆகியவற்றிற்கு உகந்தது.

(2) சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமா ஆகியவற்றை தீர்க்கும் அருமருந்தாக விளங்குகிறது.

(3) மலக்கட்டு விலகி, செரிமானம் மேம்படும்.

(4) வாயுப் பொருமல், வாயு தொல்லை போன்றவற்றிற்கு புதினா சாறுடன் தேன், எலுமிச்சை கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

(5) அதிக கொழுப்பை குறைப்பதுடன் தொப்பை, பருமன் இரண்டையும் குறைப்பதில் புதினா உதவுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது.

(6) பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகள் தீரவும் புதினா கைகொடுக்கிறது.

(7) அசைவ உணவும், கொழுப்புப் பொருட்களும் எளிதில் செரிமானமாக புதினா உதவுகிறது.

(8) சாப்பிட்டதும் பலருக்கும் இருக்கும் தொல்லை வாய் துர்நாற்றம். புதினாவை மென்றால் வாய் துர்நாற்றம் அகலும்.

(9) புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம்.

(10) புதினாவை தினமும் பயன்படுத்தி வந்தால், இரத்தம் சுத்தமாகும்.

(11) மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை மருந்தாக பயன்படுகிறது.

(12) வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் புதினா துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப்போக்கு நிற்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here