uses of papaya
uses of papaya

uses of papaya

பப்பாளிப்பழம் நன்மை தான். ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!..

* பப்பாளி எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு சுவையான பழம். இதை “ஏழைகளின் கனி” , “பழங்களின் தேவதை ” என்றும் கூறுவர்.

* 18 வகையான சத்துக்கள் கொண்ட ஒரே பழம் பப்பாளியாகும். கரோட்டின் சத்து இப்பழத்தில் அதிகம் காணப்படுகிறது.

* உடல் ஆரோக்கியத்திற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிடுவதைவிட தினமும் சிறிது பப்பாளி பழத்தை சாப்பிடுவது சிறந்த நன்மையை தரும்.

* கர்ப்பிணி பெண்கள் கர்ப்பம் தரித்த முதல் இரண்டு மாதத்திற்கு பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிக சூட்டினால் கரு கலையும் அபாயம் உண்டு.

* அதிகம் பழுக்காத பப்பாளியின் பால் கருக்கலைப்புக்கு வழிவகுக்கும். பப்பாளி காயை அதிகம் உட்கொண்டால் வயிற்று போக்கு அல்லது வயிற்று வலி ஏற்படலாம்.

* அளவுக்கு அதிகமாக பப்பாளியை சாப்பிடும் போது இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தி, வயிற்றில் ஒருவித எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனையை உண்டாக்குகிறது.

* பப்பாளியில் பெப்பெய்ன் என்சைம் உள்ளது. அதிகளவு பெப்பெய்ன் என்சைம் உடலுக்கு சென்றால் தொண்டை வீக்கம், நெஞ்செரிச்சல், ஆஸ்துமா, சளி, காய்ச்சல், ஒவ்வாமை மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

* பப்பாளி விதையிலுள்ள”கார்பைன்” என்ற நச்சானது, நாடித்துடிப்பை குறைப்பதோடு, நரம்பு மண்டலத்தில் அழுத்தத்தைஏற்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here