Uses Of Neem Lief
Uses Of Neem Lief

Uses Of Neem Lief :

*கண்ணுக்கு எதிரே கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கும் மூலிகை வேம்பு. *காற்று மண்டலத்தை சுத்தம் செய்து நம் நோய்களைத் தீர்க்கும் கற்பக மரம்.

*வேப்பமரத்தின் அடியில் அமர்வதாலும், அதன் காற்றை சுவாசிப்பதாலும் ஒருவிதமான மன அமைதி கிடைக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு பெருக்கக்கூடியது .

*வேப்பமரத்தின் இலைகளும், பூக்களும், கனிகளும் மருத்துவகுணம் மிக்கவையே.

● வயிற்றுப் புழுக்கள் அகல:

*காலையில் வெறும் வயிற்றில் ,சிறிது வேப்பிலைக் கொழுந்தை , சாப்பிட கொடுக்கலாம், அல்லது வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி நீரை குடிக்கலாம். இவ்வாறு குடிப்பதால் குழந்தைகளின் வயிற்றுப்பூச்சி தொல்லையிலிருந்து விடுபடலாம்.

● தீப்புண் குறைய:

*வேப்பம் கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்து ,தீப்பட்ட புண்ணின் மீது பூசி வந்தால் தீப்புண் குணமாகும்.

● வியர்வை நாற்றம் குறைய: *திருநீற்றுப்பச்சிலை ,துளசி, வேப்பம் கொழுந்து இவை மூன்றையும் நன்கு அரைத்து பாசிப் பயிறு, வெந்தய பொடி கலந்து தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் குறையும்.

● முகத்தில் உள்ள முடிகள் அகல: *வேப்பங்கொழுந்து, குப்பை மேனி இலை ,விரலி மஞ்சளை அரைத்து முகத்தில் பூசி காயவைத்து கழுவி வர முகத்தில் உள்ள முடிகள் அகன்றுவிடும்.

● தலையில் ஏற்படும் அரிப்பு குறைய: *வேப்ப இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து ,தண்ணீர் விட்டு காய்ச்சி ,சுண்டவைத்து கசாயம் போல செய்து ,ஆறிய பிறகு கசக்கிப் பிழிந்து வடிகட்டி தலையில் தடவி சிறிது நேரம் ஊறிய பிறகு ,குளித்து வந்தால் தலையில் ஏற்படும் அரிப்பு குறையும்.

● பித்தத்தால் ஏற்படும் மயக்கம்:

*வேப்பிலையை எலுமிச்சை சாற்றுடன் கலந்து அரைத்து தலைக்கு தேய்த்தால்
பித்தத்தால் ஏற்படும் மயக்கம் சரியாகும். குமட்டல் ,வாந்தி மயக்கம் போன்றவையும் குணமாகும்.

● பித்த வெடிப்பு குணமாக:

*வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி வந்தால் பித்த வெடிப்பு மற்றும் கால் பாதம் எரிச்சல் போன்றவை குணமடையும்.

● வயிற்று பிரச்சனைகளை தீர்க்கக் கூடியது.

● வேப்பம்பட்டை, நீரிழிவுக்கு சிறந்த மருந்து.

● உடம்பில் ஏற்படும் ஜன்னி கண்ட நோய்களுக்கு வேப்ப எண்ணெயில் சிறிது கற்பூரம் சேர்த்து சூடாக்கி தலை உச்சியில் தேய்க்க ஜன்னி தீரும்.

●அம்மை கண்டவர்களைச் சுற்றி வேப்பிலை கொத்துகளை போட்டு வைத்தால் இலைகளின் வாசனையால் நோயின் வேகம் தணியும். கிருமியும் அண்டாது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here