Uses of Lemon
Uses of Lemon

Uses of Lemon

தேள் கொட்டின இடத்தில் எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி தேய்த்தால் விஷம் முறியும்.

🍋 எலுமிச்சை சாற்றில் ஊறிய சீரகத்தை உலர்த்தி பொடியாக்கி குமட்டல் வரும் பொழுது சுவைக்க குமட்டல் நீங்கும்.

🍋 காரட், எலுமிச்சை பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணையில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வர முடி நன்றாக வளரும்.

🍋 எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் தீரும்.

🍋 இஞ்சி சாறு, எலுமிச்சை சாறுடன், தேனை கலந்து சாப்பிட்டு வர மார்பு வலி நிற்கும்.

🍋 எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட பித்தத்தை தணிக்கும்.

🍋 சந்தனக் கட்டையை எலுமிச்சை பழச்சாறில் ஊறவைத்து தடவ முகப்பரு, படர்தாமரை நீங்கும்.

🍋 தேநீரில் எலுமிச்சை பழச்சாறை கலந்து காலை நேரத்தில் குடித்து வர உடலின் எடை கூடாமல் தடுக்கலாம்.

🍋 பாத எரிச்சல் குறைய மருதாணி இலைகளுடன் எலுமிச்சைச் சாறு கலந்து நன்கு அரைத்துப் பாதத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து சுடுநீரில் கழுவி வந்தால் பாத எரிச்சல் குறையும்.

🍋 கைகால் சொரசொரப்பு நீங்க எலுமிச்சை பழச்சாறை தேய்க்கவும்.

🍋 நகச்சுற்று வலி குறைய எலுமிச்சை பழத்தில் சிறு துவாரம் செய்து நகச்சுற்று உள்ள விரலில் புகுத்தி வைத்தால் நகச்சுற்று வலி குறையும்.

🍋 குப்பைமேனி இலைச்சாறுடன், எலுமிச்சைச் சாறு கலந்து மூட்டு வலி மேல் பூசினால் மூட்டு வலி குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here