Uses of Kuppai Meni
Uses of Kuppai Meni

Uses of Kuppai Meni :

பைசா,செலவில்லாமல் பல நோய்களைக் குணப்படுத்த உதவும் குப்பைமேனி செடியின் பயன்களைப் பற்றி பார்க்கலாமா!

1.அரை டீஸ்பூன் குப்பைமேனி சாறுடன், உப்பு கலந்து பருக நெஞ்சில் இருக்கும் சளியை வெளியேற்றும். குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது வாந்தியுடன் சளி வெளியேறும். வாரத்திற்கு இரு முறை கொடுக்கலாம் எந்த தவறும் இல்லை.

2. குப்பைமேனியை, சுண்ணாம்புடன் கலந்து போட வீக்கம் குறையும், விஷத்தை முறிக்கும் புண்ணுக்கும் போடலாம்.

3. குப்பைமேனியை விளக்கெண்ணையில் வதக்கி மூட்டு வலி இருக்கும் இடத்தில் பற்றுப் போடும்போது வலியை குறைக்கும், வீக்கத்தை குறைக்கும்.

4. குப்பை மேனி இலையை நிழலில் உலர்த்தி நான்கு நாட்களுக்குப் பின் வெயிலில் உலர்த்தி பொடி செய்ய வேண்டும் .இந்த பொடியை நீண்ட படுக்கையில் இருப்பவருக்கு ஏற்படும் படுக்கைப்புண்ணுக்கு நிவாரணம் கொடுக்கவல்லது.

5. குப்பைமேனி இலையின் பொடியை ,மஞ்சள் தூள்,தேங்காய் எண்ணெய்,அல்லது நல்லெண்ணெயில் கலந்து போட ஆறாத புண்கள் சரியாகும்.

6. குப்பை மேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி ,தீப்பட்ட புண் இவற்றின் மேல் பூசலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும்.

7. குப்பைமேனி இலை சாறுடன் சுண்ணாம்பு சேர்த்து பூசி வர படர்தாமரை, சொறி ,பூச்சிக்கடி ,காணாக்கடி இவற்றிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

8. குப்பைமேனி இலைகளை உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும்.
இந்த பொடியிலிருந்து அரை ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வர வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும்.

இந்த பொடியை ஆறு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

Advertisements

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here