Uses of Karupatti Vellam
Uses of Karupatti Vellam

Uses of Karupatti Vellam :

கருப்பட்டி வெல்லம் செய்யும் அற்புதங்கள்:

*பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனை நீரில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.

* இந்த பனை நீரில் இருந்து தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி. இதனை பனை வெல்லம் என்றும் அழைப்பர்.

* தீங்கு விளைவிக்கும் சர்க்கரைக்கு சிறந்த மாற்றாகும். பழங்காலத்தில் எல்லாம் இனிப்புச் சுவைக்காக கருப்பட்டியைத் தான் அதிகம் பயன்படுத்தி வந்தார்கள்.

பயன்கள்:

1. சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.

2. ஓமத்தை, கருப்பட்டி-யுடன் சேர்த்துச் சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கும்.

3. குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

4. காபி, டிக்கு சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

5. சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.

6. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here