Uses of Guava
Uses of Guava

Uses of Guava : கனிகளில் மற்றக் கனிகளுக்குச் சற்றும் குறையாத மருத்துவக் குணங்களைக்கொண்டது கொய்யா.

1)உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு மிகவும் ஏற்றது கொய்யா. உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்கள், புரதங்கள், நார்ச்சத்து கொய்யாப்பழத்தில் இருப்பதால், உடல் எடை அதிகரிக்காது. உடலுக்குத் தேவையான பலமும் கிடைக்கும்.

2) டைப்-2 நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கும் கொய்யாப்பழம் உதவுகிறது.

3) கொய்யாப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற தாதுகள் மாரடைப்பைத் தடுப்பதற்கு உதவுகின்றன.

4) உடலுக்குள் இருக்கும் நஞ்சுகளை அகற்றுவது, புற்றுநோய் வராமல் தடுக்கிறது கொய்யா.

5) தினமும் ஒரு கொய்யாப் பழத்தைச் சாப்பிடுவதன்மூலம் உடலின் நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்கும்

6) கொய்யாவை சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து, மன அழுத்தத்தை தடுத்து விடலாம்.

7) தினம் ஒரு கொய்யா சாப்பிட்டால், தோல் சுருக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

8) கொய்யாவினை தினசரி உட்கொண்டு வந்தால் ஸ்கர்வி நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

9) கொய்யா இலைகளிலிருந்து எடுக்கப்படும் சாறு பல்வலி, வீங்கிய ஈறுகள் மற்றும் வாய்வழிப் புண்கள் ஆகியவற்றைக் குணப்படுத்துகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here