Uses Of Curry Leaf :

கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் ஒரு வகை இலையாகும். “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவி கறிவேப்பிலை என்று ஆனது.

கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள்:

கறிவேப்பிலையில் பாஸ்பரஸ், வைட்டமின் – ஏ, வைட்டமின் – பி, வைட்டமின் – பி2, வைட்டமின் – சி, சுண்ணாம்பு (கால்சியம்) மற்றும் இருபுச்சத்து, கார்போஹைட்டிரேட், புரதம், தாது உப்புக்கள், அமினோ அமிலங்களான கிலைகோஸைட்ஸ், செரின், அஸ்பார்டிக் அமிலம், அலனைன், புரோலைன் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன.

கறிவேப்பிலையின் பயன்கள்:
◇ முடி வளர
கறிவேப்பிலையை அரைத்து தயிருடன் சேர்த்து சாப்பிட முடி நன்றாக வளரும்.

◇ இளநரை மாற
கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி போன்றவற்றின் சாறெடுத்து தலையில் தடவி வர இளநரை மாறும்.

◇ உடல் எடை குறைய
கறிவேப்பிலை இலைகளை சேர்த்து அருந்திவர உடல் எடை விரைவில் குறையும்.

◇ கண் சூடு தணிய
கறிவேப்பிலை பழங்களை சாப்பிட்டு வந்தால் கண் சூடு தணியும்.

◇ சீதபேதி குறைய
கறிவேப்பிலையை எடுத்து தூளாக்கி நெய்யில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

◇ நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாக
கறிவேப்பிலை, புதினா ,கொத்தமல்லி, கீரைத்தண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

◇ பசி எடுக்க
கறிவேப்பிலை, மிளகு இரண்டையும் நெய்யில் வறுத்து வெந்நீர் ஊற்றி அரைத்துக் குடித்தால் பசி எடுக்கும்.

◇ பித்தத்தைப் போக்க
கறிவேப்பிலையை துவையல் செய்து சாப்பிட்டால் பித்தத்தை போக்கும்.

◇ உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பட
கறிவேப்பிலைகளை நீர் விட்டு அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

◇அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்பு மாற
கறிவேப்பிலை ஒரு பிடி, கசகசா, ஒரு கரண்டி கஸ்தூரி மஞ்சள் ஒரு துண்டு இவைகளை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி காயவைத்து குளித்து வர அம்மை தழும்பு மறையும்.

◇ பித்தத்தினால் ஏற்படும் பைத்தியம் குணமாக
கறிவேப்பிலையை துவையலாகவோ அல்லது பொடி செய்து கொண்டு தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர பித்தத்தினால் ஏற்படும் பைத்தியம் குணமாகும்.

நாம் உண்ணும் உணவில் தேவையில்லை என்று நாம் தூக்கி எறியும் கறிவேப்பிலையில் நிறைந்துள்ள நன்மைகளை உணவில் சேர்த்து அதன் பயன்களை முழுமையாக அடைய வாழ்த்துக்கள்.

கறிவேப்பிலையை சுவையுங்கள் நோயில் இருந்து விடுபடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here