Uses Of Coriander | Health Benefits | Natural Beauty Tips | Beauty Tips | | Top 10 Best Health Benefits | Health Tips | Coriander Seeds For Weight Loss

Uses Of Coriander : * கொத்தமல்லி விதையை கொதிநீரில் ஊறவைத்து காலையில் குடித்து வர தலைசுற்றல், கிறுகிறுப்பு குணமாகும்.

* முருங்கை இலை , கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து நீரை குடித்து வந்தால் பேறுகால வலி குறையும்.

* கொத்தமல்லி இலைகளை சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறைந்து, பித்தம் குறையும்.

* கொத்தமல்லி இலையை சாப்பிட வாய் நாற்றம் குறையும்.

* கொத்தமல்லி இலைகளை அரைத்து 2 தேக்கரண்டி அளவு சாறு எடுத்து மோரில் கலந்து உணவுக்கு பிறகு குடித்து வந்தால் அஜீரணம் குறையும்.

* கொத்தமல்லித் தழைச்சாறும், புதினா கீரைச்சாறும் கலந்து முகத்தில் தடவி வர முகப்பரு குறையும்.

* கொத்தமல்லி இலை, சரக்கொன்றை இலை, புளி சேர்த்து காய்ச்சி வாய் கொப்பளித்து வர தொண்டை வீக்கம் நீங்கும்.

* கொத்தமல்லி இலைகளை அரைத்து உடல் மீது பூசி வர தோல் பளபளப்பாகும்.

* கொத்தமல்லி இலையை அரைத்து சொரசொரப்பான இடத்தின் மேல் பூசி வந்தால் சொரசொரப்பான தோல் மிருதுவாகும்.

* தோல்நீக்கிய சுக்கு, மிளகு, வெந்தயம் , கொத்தமல்லி, கடுகு போன்றவற்றை நெய் விட்டு நன்றாக வறு
இடித்து பொடி செய்து சாப்பிட்டால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.

* கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here