Uses of Caste Wise Census

தமிழக மக்களின் சாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிப்பதன் மூலம் யாருக்கு என்ன பயன்? இந்த புள்ளி விவரங்களை சேகரிக்க தனி ஆணையம் அமைக்கப்படுவது ஏன் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Uses of Caste Wise Census : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. இவர் தமிழக மக்களின் ஜாதிவாரியான கணக்கெடுப்பை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் தனி ஆணையம் அமைத்து அந்த ஆணையம் உடனடியாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஜாதி ரீதியான விவரங்களை சேகரிக்க தனி ஆணையம் அமைக்கப்பட்டது ஏன் இதனால் என்ன பயன் என்ன தொடர்ந்து பல தரப்புகளில் இருந்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

தற்போது இதற்கான காரணங்கள் என்னென்ன? இதனால் யாருக்கு பயன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாதிவாரி கணக்கெடுப்பிற்காக முதல்வர் அமைத்துள்ள ஆணையம் என்பது மாண்புமிகு அம்மாவின் கொள்கையான சமூக நீதியை நிலைநாட்டவே.

இப்போது வழங்கப்பட்டு வரும் சலுகையானது, 1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகிறது. இந்த 90 ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கம், இடம் பெயர்வு போன்ற பல்வேறு மாற்றங்கள் என்பது ஏற்பட்டிருக்கும்.

பட்டியலினத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கான அடிப்படை என்ற கோட்பாட்டை கொண்டு இயங்கும் அம்மாவின் அரசு, தற்போதைய சாதிய ரீதியான விகிதத்திற்கு ஏற்ப சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இந்த ஆணையத்தை அமைக்க உத்தரவிட்டார்.

பல்வேறு சாதிய அமைப்புகள் மற்றும் கட்சிகள் அவரவர் சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கோரி வரும் நிலையில், அவர்கள் வைக்கப்படும் கோரிக்கைகள் நியாயமா என்பது இந்த ஆணையம் வழங்கும் இறுதி அறிக்கையில் தெரிய வரும்.

தனியார் நிறுவனங்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவுகள் தமிழகத்தில் பட்டியலினத்தவர்களின் ஜனத்தொகை கடந்த சில ஆண்டுகளில் பெருகி வந்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசு அதிகாரபூர்வமாக எடுக்கவுள்ள ஆய்வுகள் யாருக்கு சாதமாக அமையும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

அரசின் சலுகைகள் சரியான, அதே சமயம் தேவையான மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆணையத்தை அமைத்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

மேலும், இந்த ஆணையத்தின் மூலம் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீட்டை உறுதிபடுத்த முடியும்.
உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீட்டு வழக்குகளில் அவ்வப்போது ஜாதி ரீதியலான பிரதிநிதிதுவத்தை நியாப்படுத்தும் வகையில் கணக்கெடுப்புகளை கேட்டு வருகிறது. இந்த ஆணையத்தின் மூலம் உச்ச நீதி மன்றத்தில் இடஒதுக்கீட்டு வழக்கில் தமிழகத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை உறுதிபடுத்த முடியும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவித்த பின், ஆணையத்தின் தலைவராக ஒய்வு பெற்ற நீதிபதி குலசேகரனை நியமித்து உத்திரவிட்டுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. இதன் மூலம் ஆணையத்தின் செயல்பாடுகள் துவங்கப் பெற்று, விரைவில் கணக்கெடுப்பு பணியும் துவங்கும்.

தற்போதைய நிலவரப்படி சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளி விவரங்களை (Quantifiable Data) சேகரிக்கும் வழி முறைகளை முடிவு செய்து, அப்புள்ளி விவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கையாக சமர்பிக்கும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.