Urundai Kulambu :

தேவையான பொருட்கள் :

கடலை பருப்பு – 1 கப் (1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் )
சோம்பு – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – 3
கடுகு, சீரகம் – சிறிதளவு
தேங்காய் – சிறிதளவு
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – 3
மிளகாய் தூள், மல்லிதூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
கறிவேப்பில்லை, கொத்த மல்லி – சிறிது
பெருகாயம் – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

ஒரு மணி நேரம் ஊற வைத்த கடலைப்பருப்பை சோம்பு, சிறிது உப்பு சேர்த்து சற்று மொரமொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய கறிவேப்பில்லை, கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக கலந்து பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், அதில் உருட்டி வைத்துள்ள மாவு உருண்டையை லேசாக பொன் நிறமாக பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு, சீரகம் பொரிந்ததும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், சிறிது பெருகாயம், பூண்டு சிறிதாக நறுக்கியது, சிறிது கறிவேப்பில்லை, பச்சை மிளகாய் நறுக்கி சேர்த்துக் வதக்கி கொள்ள வேண்டும்.

பிறகு அதில், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும், நன்றாக வதங்கியதும் அதில் மிளகாய் தூள், மல்லிதூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். சிறுது உப்பு, புளி கரைசல் உடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

10 நிமிடம் விட்டு அதில் தேங்காய், சோம்பு சேர்த்து அரைத்த மசியலை கொதிக்கும் சாம்பாரில் சேர்த்து கொள்ள வேண்டும்.

5 நிமிடம் கழித்து சிறிது கொத்தமல்லி சேர்த்து அதில் பொரித்து வைத்துள்ள உருண்டையை போட்டு ஒரு கலக்கு கலக்கி விட்டு இறக்கினால் சுவையான உருண்டை குழம்பு தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here