Uppena Movie Collection Reoport

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பெண்ணா திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

Uppena Movie Collection Report : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கலாம் என கூறப்படுகிறது.

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் இயக்குனர் ரோகாந்த் இயக்கத்தில் நடித்து வரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தோட ட்ரெய்லர் குறித்த போஸ்டரை விஜய் சேதுபதி தன்னோட இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி உள்ளார்.

25 நாளில் 100 கோடி வசூல்.. விஜய் சேதுபதி படம் படைத்த வசூல் சாதனை.!!

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான உப்பெண்ணா படத்தில் புது முகங்களான பஞ்ச வைஷ்ணவ் மற்றும் கீர்த்தி ஷெட்டி இருவருக்கும் இடையேயான காதலும் ஆக்ஷனும் கலந்த படமாக உருவாகி இருந்தது.

விஜய் சேதுபதி வில்லனாக நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் 25 நாளில் ரூபாய் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் இவர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் சூரியின் தந்தையாக நடிக்கிறார். ஜீ.வி பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.