Super Star Rajinikanth Upcoming Movies
Super Star Rajinikanth Upcoming Movies

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக போகும் நான்கு திரைப்படங்களின் இயக்குனர் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.

Super Star Rajinikanth Upcoming Movies : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் மூன்று படங்களில் நடிக்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தன்னுடைய தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு தனக்கு பல ஹிட் படங்களை கொடுத்த கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் மீண்டும் ஒருமுறை நடிக்க நடிகர் ரஜினிகாந்தை ஆசைப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கலாம் என ரஜினிகாந்த் சிந்தித்து வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த படங்களை முடித்த பிறகே முழு நேர அரசியலில் ஈடுபடலாம் என ரஜினி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.