Update About Soorarai Pottru
Update About Soorarai Pottru

தியேட்டர் திறந்ததும் முதலில் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம் என பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update About Soorarai Pottru : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று.

ரசிகர்கள் மத்தியில் எல்லையில்லா எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் மாதம் ரிலீசாக இருந்தது. ஆனால் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

ரசிகர்கள் தற்போதைக்கு இப்படத்தைப் பற்றிய அப்டேட்டாவது வெளியிடுங்கள் என அடிக்கடி படக்குழுவினரிடம் கேட்டு வருகின்றனர்.

STR எடுத்த அதிரடி முடிவு.. அடுத்தடுத்து உருவாகப் போகும் படங்கள் என்னென்ன? – வெளியான அதிரடி அப்டேட்

இந்த நிலையில் தற்போது பாடலாசிரியரும் இயக்குனருமான அருண் ராஜா காமராஜா இப்படத்தின் பாடல் குறித்து பேசியுள்ளார். அதாவது இப்படத்தின் பாடல்கள் இளைஞர்கள் விரும்பும் வகையிலும் மோட்டிவேஷன் கொடுக்கும் ஒன்றாகவும் அமைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்து இயல்பு நிலை திரும்பியது தியேட்டர்கள் திறக்கப்பட்டால் முதலில் வெளியாவது படமாக தான் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், தனுஷின் ஜகமே தந்திரம் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சூரரைப் போற்று படத்தை தொடங்கி சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் ஹரி இயக்கத்தில் அருவா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.