ஊரடங்கு உத்தரவால் OTT வழியாக அடுத்தடுத்து சில தமிழ் படங்கள் வெளியாக உள்ளன அவை என்னென்ன என்பது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.
Upcoming Tamil Movie Release in OTT : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து துறைகளும் முடங்கி உள்ளது. சினிமாத்துறையும் முடக்கப்பட்டுள்ளது.
தியேட்டர்கள் இழுத்து மூடப்பட்டு உள்ளதால் புதிய படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர்.
இதனால் சில படங்களை நேரடியாக இணையத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். முதலில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள்வந்தாள் திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்தடுத்து சில தமிழ் படங்கள் இதே OTT வழியாக வெளியாக உள்ளது.
இந்தப் படங்களின் விவரம் இதோ
1. பொன்மகள் வந்தாள்
2. ஆர் கே நகர்
3. பரமபதம் விளையாட்டு
4. நரகாசூரன்