சத்தமில்லாமல் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் நடிகை நயன்தாரா.

Upcoming Movies of Nayanthara : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்திய அணியில் முக்கிய வீராங்கனை 17 வயதான ஷபாலி வர்மா : கேப்டன் மிதாலி

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க வழக்கறிஞராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. நெற்றிக்கண் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் தற்போது இவர் சப்தமில்லாமல் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றார் லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் மஞ்சுவாரியர் வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார்.

Suriya 40 படம் குறித்த புதிய அப்டேட் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | Pandiraj | Priyanka Arul Mohan

மேலும் கதாநாயகி மையமாகக் கொண்ட இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த இரண்டு படங்களும் தமிழில் உருவாக உள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.