Untold Secrets Of Mudhalvan
Untold Secrets Of Mudhalvan

முதல்வன் படத்தில் விஜய் நடிக்காமல் போனது ஏன் என முதல்முறையாக ரகசியங்களை உடைத்துள்ளார் சங்கர்.

Untold Secrets Of Mudhalvan : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். தளபதி விஜயின் தந்தையும் இயக்குனருமான ஏசி சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

அதன் பின்னர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராகி ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். ஜென்டில்மேன் திரைப் படத்திற்கு அடுத்ததாக ஜீன்ஸ், காதலன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்தார்.

அடுத்ததாக இவர் முதல்வன் என்ற படத்தின் கதையை உருவாக்கி அதில் ரஜினி நடிக்க வைக்க முயற்சி செய்தார். ஆனால் தன் மீது அரசியல் சாயம் பட்டு விடும் என ரஜினி இப்படத்தை மறுத்தார்.

துப்பாக்கி சக்சஸ் பார்ட்டியில் தளபதி விஜய் செய்த வேலை – முதல் முறையாக உண்மையை உடைத்த வில்லன் வித்யூ ஜமால்

பின்னர் தன்னுடைய உதவி இயக்குனர் மூலமாக விஜயிடம் படத்தின் கதையை கூற முயற்சி செய்துள்ளார் சங்கர். சங்கர் அனுப்பிய உதவிய இயக்குனருக்கும் SACக்கும் இடையே பேச்சுவார்த்தை சரி வராததால் இந்த படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனது.

அதன் பின்னர் தான் அர்ஜுன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக சங்கர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். முதல்வன் படம் வெளியானதும் இப்படியொரு படத்தை மிஸ் செய்து விட்டோமே என விஜய்யும் SAC-யும் வருத்தப்பட்டுள்ளனர்.