Untold Secret of Sura Movie
Untold Secret of Sura Movie

தளபதி விஜயின் 50வது படமான சுறா அதற்கு முதலில் என்ன டைட்டில் வைக்க இருந்தார்கள் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Untold Secret of Sura Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். சமீப காலமாக விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் அரசியல் கட்சிகள் மத்தியில் சர்ச்சைக்கு உள்ளாகி பிரச்சினைகளில் சிக்கி வருகிறது.

இவரது நடிப்பில் ஐந்தாவது திரைப்படமாக வெளியாகி எதிர்பாராத அளவில் தோல்வியை தழுவிய திரைப்படம் சுறா. இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் என்பவர் இயக்கியிருந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படம் விஜய் ரசிகர்களை மிகவும் நொந்து கொள்ள வைத்தது.

வனிதாவை சீண்டி TRP-ஐ எகிற வைக்க போகும் பிக் பாஸ், வர போவது யார் தெரியுமா?? – லீக்கானது விஜய் டிவி-யின் பிளான்!(Opens in a new browser tab)

இந்த படத்திற்கு முதலில் படக்குழு நம்ம வீட்டு பிள்ளை என்ற டைட்டிலை தான் வைக்க முடிவு செய்துள்ளனர். தளபதி விஜய் எம்ஜிஆரின் ரசிகர் என்பதால் இந்த டைட்டிலை தேர்வு செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் படகோட்டி பட டைட்டில்களை பரிசீலனையில் இருந்தன. இறுதியில் பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்வது என்ற ஒரே காரணத்தினால் இப்படத்திற்கு சுறா என்று பெயர் வைத்து படத்தை ரிலீஸ் செய்துள்ளனர்.

இதனை படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.