Unlock 4.O Details in Tamilnadu
Unlock 4.O Details in Tamilnadu

தமிழக அரசு ஊரடங்கு உத்தரவில் அடுத்த கட்ட தளர்வுகளை அறிவித்துள்ளது.

Unlock 4.O Details in Tamilnadu : மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்தகட்ட தளர்வுகளை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது தமிழக அரசு.

இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த தகவல்கள் இதோ

  1. மாவட்டங்களுக்கு இடையேயான இ- பாஸ் நடைமுறை முற்றிலும் ரத்து. ஆனால் மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் பெற்று மட்டுமே தமிழகத்திற்குள் வரவேண்டும் எனவும் அறிவிப்பு.
  2. மாவட்டங்களுக்குள் பொது போக்குவரத்தை தொடங்க அனுமதி. சென்னை மாநகரிலும் பொதுப் போக்குவரத்தை 7ம் தேதி முதல் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  3. செப்டம்பர் ஏழாம் தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் எனவும் அறிவிப்பு.
  4. அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதி.
  5. தளர்வுகள் உடனான ஊரடங்கு செப்டம்பர் முப்பதாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது ஆக அறிவிப்பு.
  6. வணிக வளாகங்கள், ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 100 சதவீத தொழிலாளர்களுடன் திறக்க அனுமதி.
  7. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை திறந்து வைக்க அனுமதி.
  8. ஹோட்டல்கள் டீ கடைகள் என அனைத்து இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 9 மணி வரை பார்சல்களை வழங்கலாம் என அறிவிப்பு.
  9. தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் போன்றவை மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி.
  10. விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் ஆகியவை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கலாம். விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
  11. செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறன் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் செயல்பட அனுமதி.
  12. அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
  13. வங்கிகள் அதை சார்ந்த நிறுவனங்களும் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.
  14. நீலகிரி கொடைக்கானல் ஏற்காடு ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு வெளி மாவட்டத்தினர் செல்வதை கட்டுப்படுத்த இ-பாஸ் பெற்று செல்ல அனுமதி.
  15. திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
  16. ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு ரத்து.
  17. மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து செப்டம்பர் 15-ஆம் தேதி வரை தடை. அதன்பிறகு சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கப்படும் என அறிவிப்பு.
  18. விமான போக்குவரத்து, ரயில் போக்குவரத்து மூலம் தமிழகம் வருபவர்கள் தனிமைப் படுத்திக் கொள்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என அறிவிப்பு.
  19. சென்னை விமான நிலையத்தில் 50 விமானங்கள் தரையிறங்க அனுமதி மற்ற விமான நிலையங்களில் பழைய நடைமுறையே தொடரும் என அறிவிப்பு.

எவற்றுக்கெல்லாம் தடை தொடரும் என்பது பற்றிய தகவல்

*பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம்.

*திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்.

*மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

* புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து

*மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.