வலிமை படத்துக்கு முதன் முதலாக வைத்த டைட்டில் என்ன என்பது தெரியவந்துள்ளது.

Unknown Secrets of Valimai Title : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் வலிமை. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடித்திருந்தார். வினோத் படத்தை இயக்க போனிகபூர் தயாரித்திருந்தார்.

டைட்டில் மாற்றியதற்கு கோடி நன்றிகள்.. வலிமை படத்திற்கு முதலில் வைத்த டைட்டில் என்ன தெரியுமா?

இந்த படத்திற்கு முதன் முதலாக வைக்கப்பட்ட டைட்டில் என்ன என்பது பற்றிய தகவல் தற்போது தெரியவந்துள்ளது. முதன் முதலாக இதற்கு சாத்தானின் குழந்தை என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால் அதன் பிறகு இந்த டைட்டில் நன்றாக இல்லை என்பதால் போனிகபூர் அஜித்திற்கு சென்டிமென்டான வி என்ற எழுத்தில் வையுங்கள் என கூறியுள்ளார்.

டைட்டில் மாற்றியதற்கு கோடி நன்றிகள்.. வலிமை படத்திற்கு முதலில் வைத்த டைட்டில் என்ன தெரியுமா?

அதன் பிறகுதான் வலிமை என்ற டைட்டிலை தேர்வு செய்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக அஜித் ரசிகர்கள் டைட்டிலை மாற்றியதற்கு கோடி நன்றிகள் என கூறி வருகின்றனர்.